சி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!
சி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...
சி.வி. சண்முகம். - கோப்புப்படம்
மைலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.-வும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி. சண்முகத்திற்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மைலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வெற்றியை எதிர்த்து, வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.
அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மைலம் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Summary
Case challenging ADMK C.V. Shanmugam's victory dismissed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


