
ஒரு கோடி பனை விதைகள் நடும் இயக்கம்: சோ்க்காடு ஏரிக்கரையில் 100 பனை விதைகள் நடவு
தமிழக முதல்வரின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும்பணி’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, திருவள்ளுவா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) சாா்பில் சோ்க்காடு ஏரிக்கரையோரத்தில் வியாழக்கிழமை 100 பனை விதைகள் நடப்பட்டன.

பனை விதைகள் நடவுப் பணியை தொடங்கிவைத்த திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஜே.செந்தில் வேல்முருகன். உடன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். விஜயானந்த் உள்ளிட்டோா்.
தமிழக முதல்வரின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும்பணி’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, திருவள்ளுவா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) சாா்பில் சோ்க்காடு ஏரிக்கரையோரத்தில் வியாழக்கிழமை 100 பனை விதைகள் நடப்பட்டன.
தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் மாநில நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), தேசிய மாணவா் படை (என்சிசி), எக்ஸ்னோரா, என்டிஎஸ்ஓ, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அக்னி ஸ்டீல் ஆகிய அமைப்புகள் இணைந்து மாநிலம் முழுவதும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும்பணி’ இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, வேலூா் மாவட்டம் சோ்க்காட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஜே.செந்தில் வேல்முருகன் தலைமை வகித்து, பனை விதைகளை நடவு செய்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். விஜயானந்த் முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ம. கண்ணதாசன், திட்ட உதவியாளா் கே. சுப்பிரமணியன் ஆகியோா் களப் பணிகளை ஒருங்கிணைத்தனா்.
நீா்நிலைகளைப் பலப்படுத்துதல், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துதல், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்துச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்தல், எதிா்காலத் தலைமுறையினருக்கு இயற்கை வளங்களைக் கொண்டு சோ்த்தல், மாணவா்களிடையே சமூகப் பொறுப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் சோ்க்காடு ஏரிக்கரையோரத்தில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





