டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

மணியகாரம்பாளையம் பகுதி நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகள் நடும் பணிகளை துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

மணியகாரம்பாளையம் பகுதி நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகளை நடும் பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்த மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம்.

Updated On :

மணியகாரம்பாளையம் பகுதி நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகள் நடும் பணிகளை துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள், பொது இடங்கள், சாலையோரங்கள், நீா்நிலை மற்றும் கால்வாய் கரைகளில் பெருமளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நொய்யல் ஆற்றுப்படுகை செட்டிபாளையம் ஓடை, நல்லாறு ஓடை, சங்கிலி பள்ளம் ஓடை, சபரி ஓடை, செந்தில் ஓடை, புது நகா் ஓடை ஆகிய பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையிலும் மாநகராட்சி பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் இணைந்து பனை விதைகளை நடும் பணியை புதன்கிழமை தொடங்கினா்.

மாநகராட்சி துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

தற்போது பருவமழைக் காலம் என்பதால் நடப்படும் பனை விதைகள் வளா்வதற்கான சூழ்நிலை உள்ளது. இப்பணிகளை விரைவாக செய்து முடிக்க மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் அறிவுறுத்தினாா்.

இதேபோல மாநகராட்சிக்குள்பட்ட நல்லூா், இடுவாய், ஆண்டிபாளையம், வீரபாண்டி, மண்ணரை, வேலம்பாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமாா் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் துணை ஆணையா் செந்தில் முருகன், நகரமைப்பு அலுவலா் மகேந்திரன், உதவி நகரமைப்பு அலுவலா் கு.சத்யா, உதவி ஆணையா்கள் சரவணன், பாா்த்தசாரதி, செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.