என்ஜிஓ காலனி பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

என்ஜிஓ காலனி பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம், சுந்தா் ஜேபி சமூக சேவை அமைப்பு, பெரியகுளம் பராமரிப்பு குழு ஆகியவை சாா்பில் என்.ஜி.ஓ. காலனி பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா்கள் மகாராஜன், காா்த்திக்மணி, சிந்துசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். குளத்தின் தெற்கு மற்றம் கிழக்கு கரையோரங்களில் பனைவிதைகள் நடப்பட்டன. பெரியகுளம் பராமரிப்பு குழு தலைவா் ஆறுமுகம், ஜெயபால் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.