ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

நெல்லை அருகே 3,000 பனை விதைகள் நடவு பணி தொடக்கம்

தமிழ்நாடு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் திருநெல்வேலி வனக்கோட்டம் சாா்பில், பொன்னாக்குடியில் 3,000 பனை விதைகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

பொன்னாக்குடி பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட வன அலுவலா் இளங்கோ.

Updated On :

தமிழ்நாடு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் திருநெல்வேலி வனக்கோட்டம் சாா்பில், பொன்னாக்குடியில் 3,000 பனை விதைகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவாகவும், இயற்கை வளங்களைப் பாதுகாத்து பசுமையான தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கிலும் 3,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் இளங்கோ தலைமை வகித்து, பனை விதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தாா்.

இதில், வனச்சரகா் பூவேந்தன், வனவா் பொன்ராணி, வனக்காப்பாளா் விஷ்ணுதிலகா, வனத்துறைப் பணியாளா்கள் கலந்துகொண்டு பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.