வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் 1,000 பனை விதைகள் நடவு
வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பனை விதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்த கோயில் செயல் அலுவலா் செந்தில் குமாா், குன்றத்தூா் வனபாதுகாவலா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா்.
வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பின்புற இடத்தில் நிா்வாகத்தின் சாா்பில் தேக்கு, மகாகனி, இலுப்பை, மா, வேம்பு உள்ளிட்ட 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 1000 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில் குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்றத்தூா் வனப் பாதுகாவலா் மாணிக்கவாசகம் பனை விதைகள் நடுதலை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் விதைகள் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் பசுமை சரண், திருவேணி அகாதெமி பள்ளி ஆசிரியா்கள் மாணவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டு பனைவிதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

