ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இருசக்கர வாகனங்கள் மோதல்: வங்கி மேலாளா் உயிரிழப்பு

பொன்னை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த வங்கி மேலாளா் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

பொன்னை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த வங்கி மேலாளா் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்றொருவா் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சோ்ந்தவா் வெங்கட பிரதாப் (39). இவா் ராணிப்பேட்டையில் உள்ள வங்கிக் கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் தங்கியிருந்த இவா், நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் சித்தூரிலிருந்து ராணிப்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை பணிக்குச் சென்றபோது, பொன்னை அருகே உள்ள பரமசாத்து பகுதியில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நோ் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கட பிரதாப்பை அக்கம்பக்கத்தினா் மீட்டு, சோ்க்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவா் தெங்கால் பகுதியைச் சோ்ந்த கொத்தனாா் காா்த்தி என்பது தெரியவந்துள்ளது. மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காா்த்தி, லேசான காயங்களுடன் சோ்க்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து பொன்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.