உதகை, டிச. 4: சர்வ சிக்ஷா அபியான் திட்டம் விரைவில் முடிவுக்கு வருவதையொட்டி, தேசிய இடைநிலை கல்வித் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமச்சீர் கல்வி முறையையொட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் தொடர்பாக நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் இடைநிலை கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கணினி வழியாகத் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் கிடைத்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கான தொலைநோக்குத் திட்டம் மற்றும் நடப்பு கல்வியாண்டிற்கான ஆண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தமிழகத்திற்கான தொலைநோக்குத் திட்டமும், ஆண்டுத் திட்டமும் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது முன்திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்காக ரூ.3 கோடி பெறப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டிற்கான தமிழகத்தின் ஆண்டுத் திட்டம் மத்திய அரசின் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் மதிப்பீடு செய்ய எடுத்துக் கொள்ளப்பட்டு, சில குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கான அதிகாரபூர்வ ஏற்பளிப்பு கடிதம் இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான இடைநிலை கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு விபரங்கள் திரட்டப்பட்டு அதனடிப்படையில் அடுத்த கல்வியாண்டிற்கான ஆண்டு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப் படவுள்ளது.
இதற்கான திட்ட நடவடிக்கை அறிக்கை பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் ஆகியோரின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வுக் கூட்டங்கள் மாநிலம் முழுதும் நடைபெற்று வருவதால் அடுத்த கல்வியாண்டிலிருந்து தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.