திருப்பூரில் தெருநாய்கள் தொல்லை: மாநகராட்சி மீது புகார்

திருப்பூர், செப்.21:   தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவதில் மாநக ராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருவ தாக திருப்பூர் நுகர்வோர் குரல் குற்றம் சாட்டியுள் ளது.   திருப்பூர் நுகர்வோர் குரல்
Updated on
1 min read

திருப்பூர், செப்.21:   தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவதில் மாநக ராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருவ தாக திருப்பூர் நுகர்வோர் குரல் குற்றம் சாட்டியுள் ளது.

  திருப்பூர் நுகர்வோர் குரல் அமைப்பின் 10-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அமை ப்பு தலைவர் கே.சி.எம்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலர் ப.சோமசுந்தரம் வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  திருப்பூர் மாநகரில் தெருநாய்களின் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. இப்பிரச்னையில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் மாநக ராட்சி நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிப்பது டன், தெரு நாய்களின் தொல்லையை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அதிக உயரமாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் ஏற்படும் இன்னல்களை களைய வேகத்தடைகளின் உயர த்தை உயரத்தை குறைத்து மாற்றியமைக்க வேண்டும். ஷேர் ஆட்டோ முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

  கொங்குநகர் ரயில்வே மேம்பாலம் மற்றும் அங்கீகரி க்கப்பட்ட மற்ற பாலங்கள் கட்டும்பணியை துரிதப்படுத் த வேண்டும். பழைய பஸ்நிலையத்திலிருந்து கொங்குந கர், எம்.எஸ்.நகர் வழியாக புதிய பஸ்நிலையத்துக்கும் திரும்ப அதே வழியிலும் அதிகளவில் புதிய பஸ்கள் இ யக்க வேண்டும். தற்போதைய 7-ம் எண் பஸ்களை புதிய பஸ்நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.

  நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள உச்சநீதிமன்ற த்தின் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் .

  பொருளாளர் ஏ.முருகேசன், துணைத்தலைவர்கள் எம்.வெங்கடாசலம், எஸ்.வி.ஈஸ்வரன், இணைச்செயலர் கள் வி.கோவிந்தசாமி, கே.குப்பண்ணன், எல்.ராஜப்பா, ஏ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com