பெ.நா.பாளையம், ஜூலை 1: பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பாலமலை அரங்கநாதர் கோயில் குறித்த தல வரலாறு நூல் வெளியீட்டு விழா, புதன்கிழமை ஜெயந்தி திரையரங்கில் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையத்துக்கு மேற்கே பாலமலை உள்ளது. இங்கு ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள பக்தர்கள் குழுவானது பாலமலை தல வரலாறு என்ற நூலை உருவாக்கியுள்ளது.
இதன் வெளியீட்டு விழாவுக்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜக் கூடத்தின் 50-வது பட்டம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்தார். கே.ஆர்.என். அறக் கட்டளைத் தலைவர் ஆர்.நாராயணசாமி நாயுடு, ஜீவிகே அறக்கட்டளைத் தலைவர் ராமகிருஷ்ண நாயுடு, பெ.நா.பாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜீயர் ஸ்வாமிகள் புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார். புத்தகப் பிரதிகளை கோவை மாவட்ட வாலிபால் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆர்.கோவிந்தராஜூலு நாயுடு, தென் திருமலை சேவா சமாஜத்தின் கருடபுரம் தேசிகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக திரையரங்கின் 25-ம் ஆண்டு நிறைவையொட்டி, மகா சுதர்சன வேள்வியை ஜீயர் நடத்தி வைத்தார். இதில் நாயக்கன்பாளையம் ஊராட்சித் துணைத் தலைவர் மகேந்திரன், கே.ஆர்.மருத்துவமனை தலைமை மருத்துவர் திலகம் ராஜேஷ், அன்னபூர்ணா உணவகக் குழுமத்தின் தலைவர் தா.சீனிவாசன், இந்துஸ்தான் மில்ஸ் அதிபர் டி.வி.ராமகிருஷ்ண நாயுடு, ராமசாமி நாயுடு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.