தென்னிந்திய செங்குந்த மகாஜனத் தலைவர் ஜெ.சுத்தானந்தன் காலமானார்

ஈரோடு, ஜூன் 26:  தென்னிந்திய செங்குந்த மகாஜனத் தலைவர் ஜெ.சுத்தானந்தன் (66) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.       ஈரோடு மாவட்டம், வள்ளிபுரத்தாம்பாளையம் எம்.ஜெகநாதமுதலியார், முத்துலட்சுமி ஆகிய

ஈரோடு, ஜூன் 26:  தென்னிந்திய செங்குந்த மகாஜனத் தலைவர் ஜெ.சுத்தானந்தன் (66) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.     

 ஈரோடு மாவட்டம், வள்ளிபுரத்தாம்பாளையம் எம்.ஜெகநாதமுதலியார், முத்துலட்சுமி ஆகியோரின் மகன் ஜெ.சுத்தானந்தன். தமிழகத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட திருநெல்வேலி தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையின் இயக்குநராக 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

 ஈரோடு கூட்டுறவு சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைத்தறி விற்பனைக் கூட்டுறவு சங்கம், ஈரோடு நெசவாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகப் பொறுப்பு வகித்த ஜெ.சுத்தானந்தனுக்கு, 1985-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெய்ல்சிங், உத்யோக்ரத்னா என்ற விருதை வழங்கினார்.

 ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளராகப் பொறுப்பு வகித்து வந்த சுத்தானந்தன், ஈரோட்டில் உள்ள பல்வேறு சங்கங்கள், கழகங்களின் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார். 1987-ம் ஆண்டு முதல் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவராகப் பதவி வகித்தார்.

 மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற சுத்தானந்தன், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். பின்னர் அவரது உடல் ஈரோடு தில்லைநகர் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள், பல்வேறு சங்கம், இயக்கம், அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

 சனிக்கிழமை மாலையில் ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளைக்கு சுத்தானந்தன் சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா உள்பட ஏராளமானோர் சுத்தானந்தன் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com