ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீ ஜெகன்நாதர் ரதயாத்திரை: கோவையில் பக்தர்கள் திரண்டனர்

கோவை, ஜன. 8: அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கோவையில் சனிக்கிழமை நடந்த ஸ்ரீ ஜெகன்நாதர் ரதயாத்திரையில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவை, ஜன. 8: அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கோவையில் சனிக்கிழமை நடந்த ஸ்ரீ ஜெகன்நாதர் ரதயாத்திரையில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பிரமாண்டமான ரதயாத்திரை கோவையில் நடத்தப்படுகிறது.  2011ம் ஆண்டிற்கான ரதயாத்திரை சனிக்கிழமை நடந்தது.  

கோவை, ராஜவீதி, தேர்நிலைத்திடலில் இருந்த அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டத் தேரில் ஸ்ரீ ஜெகன்நாதர், ஸ்ரீ பலராமர், ஸ்ரீ சுபத்திரை ஆகியோர் காட்சியளித்தனர்; வண்ண மலர், பட்டாடை மற்றும் அணிகலன்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஹரே ராம, ஹரே கிருஷ்ண கோஷங்களுக்கிடையே மகாதீபாராதனை நடந்தது. ராஜவீதியில் புறப்பட்ட தேர், பக்தர்களின் வெள்ளத்தில் நீந்தியது. கிருஷ்ண பக்திப் பாடல்களைப் பாடி, ஆடி பக்தர்கள் மகிழ்ந்தனர். ஓப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதியை ரதம் வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.