திருவிளையாடல்! பல்லடம்

திருப்பூர்: புதிய திருப்பூர் மாவட்டத்தில் இணைந்துள்ள பல்லடம் தொகுதியின் எல்லைகள் தொகுதி மறுசீரமைப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கனவே இருந்த பொங்கலூர் தொகுதி நீக்கப்பட்டு பொங்கலூர் ஒன்றியம்

திருப்பூர்: புதிய திருப்பூர் மாவட்டத்தில் இணைந்துள்ள பல்லடம் தொகுதியின் எல்லைகள் தொகுதி மறுசீரமைப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி,

ஏற்கனவே இருந்த பொங்கலூர் தொகுதி நீக்கப்பட்டு பொங்கலூர் ஒன்றியம், திருப்பூர் ஒன்றியத்தின் சில ஊராட்சிகள் பல்லடம் தொகுதியில் இணைக்கப்பட்டதுடன், சூலூர் ஒன்றியம் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

÷இத் தொகுதியில் மொத்தமுள்ள 2,28,611 வாக்காளர்களில் கொங்கு வேளாளக் கவுண்டர் 30 சதம், தலித் 28 சதம், முஸ்லிம்கள் 4 சதம், முதலியார் 8 சதம், கிறிஸ்தவர் 8 சதம், செட்டியார் 8 சதம், நாயக்கர் 8 சதம், பிற சாதியினர் 6 சதம் உள்ளனர்.

÷கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் தொகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் நாட்டிலேயே 2-ம் இடம் வகிக்கிறது. தவிர, கறிக்கோழி உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்று விளங்குகிறது.

÷பின்னலாடை உற்பத்தி, கல்குவாரி என இங்குள்ள தொழில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படுவதுடன், சுமார் 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர்.

÷கடந்த 1957 முதல் 12 பேரவைத் தேர்தல்களை சந்தித்துள்ள பல்லடம் தொகுதியில் இதுவரை அதிமுக 6 முறையும், திமுக இருமுறையும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி இரு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

÷1977-ல் இத்தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுகவின் பி.ஜி.கிட்டு, 1989-ல் வெற்றி பெற்ற திமுகவின் மு.கண்ணப்பன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.

 அதிமுக செல்வாக்குப் பெற்ற இத்தொகுதியில் கடந்த 2001 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற செ.ம.வேலுச்சாமி வணிகவரித்துறை அமைச்சரானார்.

÷இக்காலகட்டத்தில் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் பல்லடத்தில் உயர் தொழில்நுட்ப விசைத்தறிப் பூங்கா அமைக்கப்பட்டது. தவிர, 11 துணை மின்நிலையங்கள், கோழிப் பண்ணைகள், விசைத்தறிகளுக்கு மின்கட்டணச் சலுகை பெற்றுத் தந்தது தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தினார். அதன் பலனாக தொடர்ந்து 2006 பேரவைத் தேர்தலிலும் செ.ம.வேலுச்சாமியை வெற்றிவாகை

சூடினார். இத் தேர்தலில் வேலுச்சாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொகுதியில் போட்டியிட வாய்ப்பு எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அதிமுக நிர்வாகிகள் சிலரால் தேர்தல் பணிகளில் தொய்வு காணப்படுகிறது. தற்போது இந்த வாய்ப்பு கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கே.பி. பரமசிவத்துக்கு தலைமை வழங்கியுள்ளது.

÷2011 தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து முதல் பேரவை தேர்தலைச் சந்திக்கும் கொமுக, அதிமுகவுடன் நேரடிப் போட்டியில் இறங்கியுள்ளது.

இத் தொகுதியில் பாஜக உள்பட மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர். இருப்பினும்  அதிமுக வேட்பாளர் கே.பி.பரமசிவத்துக்கும், கொமுக வேட்பாளர் கே.பாலசுப்பிரமணியனுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி.

÷கடந்த 1972 முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவரும் கே.பி.பரமசிவம், அனைவரிடமும் எளிமையாகப் பழகும் குணம் கொண்டவர். கணபதிபாளையம் ஊராட்சித்  தலைவர், கூட்டுறவு பால் சங்கத் தலைவர், பிஏபி பாசன சபைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் என பல்வேறு பதவிகள் வகித்து தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமாகியுள்ளார். தவிர, இத் தேர்தலில்  அதிமுகவுடன்    தேமுதிக, இடது சாரிகள் இணைந்திருப்பது பரமசிவத்துக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

÷கடந்த 10 ஆண்டுகள் அதிமுக வசமுள்ள இத்தொகுதியின் தேவைகளான 2-வது அத்திக்கடவு குடிநீர்த் திட்டம், விசைத்தறி ஜவுளிச்சந்தை, அரசுக் கல்லூரி,

குளிர்பதனக் கிடங்கு, கோழிப்பண்ணைகளுக்கான தீவனங்கள் கொண்டுவருவதில்

உள்ள சிக்கலுக்குத் தீர்வு போன்றவை திமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படவில்லை. இது ஒருபுறம் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வாக்கு வங்கியைப் பாதிக்கும் அளவுக்கு இந்த அதிருப்தி இல்லை என்றே தெரிகிறது.

÷பரமசிவத்தை எதிர்த்துப் போட்டியிடும் கொமுக வேட்பாளர் கே.பாலசுப்பிரமணியன் அக் கட்சியின் மாநில பொருளாளராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு பூர்வீகம் பல்லடம் என்றாலும் வர்த்தகத்துக்காக குடும்பத்துடன் கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் குடியேறியது தொகுதி மக்களிடையே அன்னியத்தை ஏற்படுத்திவிட்டது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகள், சமுதாய பலத்தை எதிர்பார்த்து களம் இறங்கியுள்ளார்.

÷பிறந்த மண்ணில் பெயரை நிலை நிறுத்தும் நோக்கில் போட்டியிடும் அவர், அதிமுக செய்யத் தவறிய அரசுக் கல்லூரி, ஜவுளிச் சந்தை, ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  தொடர்ந்து அதிமுக வசமுள்ள இத் தொகுதியைக் கைப்பற்றிட கொமுகவுக்கு அனைத்து வழிகளிலும் திமுக கூட்டணிக் கட்சியினர் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

 முருகன் மயில் மீது ஏறிச் செல்வாரா? அல்லது சிவன்தான் கயிலாயத்தில் காட்சி தருவாரா? இந்தத் திருவிளையாடலில் வெற்றி யாருக்கு என்பதை இறுதிக் கட்டத்தில் தீர்மானிப்பவர்கள் வாக்காளர்களே.           

வேன் பிரசாரத்துக்கு அனுமதி ரத்து

49ஓவுக்கு வாக்குகோரி கடந்த ஒரு வாரமாக வேன் பிரசாரம் செய்து வரும் வாக்காளர் எழுச்சி பேரவை, அதற்காக போலீஸôரிடம் முறையான அனுமதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டிருந்த அந்த அமைப்பினரிடம் இப்பிரசாரத்துக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக வேனை அப்புறப்படுத்த வேண்டும் என்று போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த வாக்காளர் எழுச்சிப் பேரவையினர் அதன் நிறுவன அமைப்பாளர் கே.எல்.தெய்வசிகாமணி தலைமையில் அங்கேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப ட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் பிரசாரத்துக்கு அனுமதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com