கோவை பல் மருத்துவமனையில் நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்

கோவை, ஜூன் 24: கோவை பல் மருத்துவமனையின் நடமாடும் மருத்துவ சேவையை, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.  ÷கோவை, அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் ஞாயிற்றுக்
Updated on
1 min read

கோவை, ஜூன் 24: கோவை பல் மருத்துவமனையின் நடமாடும் மருத்துவ சேவையை, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

 ÷கோவை, அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை பல் மருத்துவமனையின் நடமாடும் கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டது.

 ÷அதைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீஸôருக்குக்கான பல் சிகிச்சை முகாமை,

 வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் தொடங்கி வைத்தார்.

 ÷கோவை பல் மருத்துவமனையின் நடமாடும் மருத்துவ சேவை குறித்து அதன் தலைவர் டாக்டர் ஏ.ஆனந்தகுமார், சாந்தி ஆனந்தகுமார் ஆகியோர் கூறியது:

 ÷மக்களிடையே பல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பற்களை சுகாதாரமாகட்க் பராமரிப்பது குறித்து விளக்கவும், நடமாடும் பல் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

 ÷அரசு பள்ளி மாணவர், அரசு ஊழியர்களுக்கு இலவசமாக இந்தப் பரிசோதனைகளைச் செய்வோம். தனியார் நிறுவனங்கள் மற்றும் இருப்பிடப் பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் பல் பரிசோதனை மேற்கொள் ளப்படும்.

 ÷ரூ. 30 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை சேவை, விரைவில் கோவைக்கு வெளியிலும் சிகிச்சை அளிக்கும் வகையில் விரிவாக்கப்படும்.

 ÷ஈறுகளில் ரத்தம் வடிதல், பற்கறை நீக்குதல், பல்லில் ஏற்பட்டுள்ள குழிகளை அடைத்தல், ஈறுகளின் வேரை நீக்குதல் (பெரும் அறுவை சிகிச்சை தவிர) போன்ற

 சிகிச்சைகள் செய்யப்படும்.

 முன்பதிவுக்கு: இந்த வேனில் நான்கு டாக்டர்கள், நான்கு மருத்துவ உதவியாளர்கள் இடம் பெறுவர். நடமாடும் மருத்துவமனையில் மாதந்தோறும் 5,000 பேர் சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் உள்ளன.

 ÷சிகிச்சை பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள 0422- 2244220, 2241220 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

 ÷இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் செ.மா.வேலுசாமி, ஆட்சியர் எம்.கருணாகரன், காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com