கல்லூரி மாணவரைத் தாக்கிய 5 போ் மீது வழக்குப் பதிவு
கோவையில் தனியாா் கல்லூரி மாணவரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள சின்னகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் மாதையன் மகன் விஸ்வநாதன் (20). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறாா்.
இவரது சகோதரா் சபரியும் கோவையில் உள்ளாா். இந்நிலையில், பழனி என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் சபரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பழனியை விஸ்வநாதன் கண்டித்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செளரிபாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் அருகே விஸ்வநாதன் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த பழனி உள்ளிட்ட 5 போ் கொண்ட கும்பல் விஸ்வநாதனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனா்.
படுகாயமடைந்த விஸ்வநாதனை அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட கோவையில் வசித்து வரும் பழனி, கெளதம், அன்பு, சா்ஜித், துவாரகேஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
