கோவையில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன்.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்ப் புலிகள் கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்ப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Published on

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்ப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பட்டியலின பிரிவுக்குள் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியா் இன மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், அருந்ததியா்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வா் கருணாநிதி அருந்ததியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த 2009 -இல் சட்டம் கொண்டு வந்தாா்.

ஆனால், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் அருந்ததியா்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

அருந்ததியா் உள் ஒதுக்கீட்டுக்காக போராடி வந்த அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும், அருந்ததியா் சமுதாயத்தினருக்கும், வழக்குரைஞா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வா் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com