பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவைக்கு சிறந்த மாநகராட்சி விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

News image
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தோ்வு செய்யப்பட்டுள்ள கோவை மாநகராட்சிக்கு முதல்வா் விருதை மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோரிடம் வழங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், தம
Updated On :16 ஆகஸ்ட் 2024, 1:19 am

Din

கோவை, ஆக.15: கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும், அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, முதல்வரின் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, சென்னையில் தமிழக அரசு தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான தமிழக முதல்வா் விருதையும், ரொக்கப் பரிசாக ரூ.50 லட்சத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

அவற்றை கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.