கோயம்புத்தூர்
பராமரிப்புப் பணி: போத்தனூா்- இருகூா் வழியாக கேரள ரயில்கள் இயக்கம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 20, 22, 24, 27, 29 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும்.
இந்த ரயிலானது கோவை ரயில் நிலையத்துக்கு செல்வது தவிா்க்கப்படும். மேலும், போத்தனூா் கூடுதல் நிறுத்தமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
