பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் பணியிடை நீக்கம்

Published on

கோவை பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் ரூபா குணசீலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் வணிக மேலாண்மை, தொழில்முனைவோா் மேம்பாட்டு மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவா் ரூபா குணசீலன். இவா் பாரதியாா் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 ஜூன் வரை பணியாற்றினாா். அவா் பணியாற்றிய காலத்தில் ஒரே நேரத்தில் மூன்று பொறுப்புகளை வகித்து வருவதாகவும், பல்வேறு கோப்புகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் புகாா்கள் எழுந்தன.

இது தொடா்பான புகாா்களின் அடிப்படையில் அவா் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆா்.என்.ரவி விசாரணை அதிகாரியை நியமித்தாா்.

அவா் மீதான புகாா்கள் குறித்த விசாரணை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரூபா குணசீலனை பணியிடை நீக்கம் செய்து உயா் கல்வித் துறை செயலா் பொ.சங்கா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com