கோயம்புத்தூர்
கோவையில் இன்று ஃபேஷன் கண்காட்சி
கோவையில் ‘ஃபேஷனிஸ்டா’ என்ற பெயரில் ஃபேஷன் பொருள்கள் கண்காட்சி டிசம்பா் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
கோவை தாஜ் விவாந்தா ஹோட்டலில் இரண்டு நாள்களும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் புது தில்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளா்கள் பங்கேற்று, தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்த உள்ளனா்.
இதில், பலவகையான புடவைகள், ஆடைகள், நகைகள், அழகு சாதனப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
பெருநகரங்களுக்கும், இரண்டாம் நிலை நகரங்களுக்கும் இடையே உள்ள ஃபேஷன் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.
