பொறியியல் பணி: திருவனந்தபுரம் - மும்பை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருவனந்தபுரம் - மும்பை வாராந்திர ரயில் (எண்: 16332) திருச்சூா் - தானே இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில் (எண்: 16332) ஷொரணூா், மங்களூரு, ரத்னகிரி, ரோகா, பன்வேல் ரயில் நிலையங்கள் வழியாக டிசம்பா் 6-ஆம் தேதி இயக்கப்படும்.
இதனால், இந்த ரயிலானது ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், ஹிந்துப்பூா், தா்மாவரம், அனந்தப்பூா், குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூா், யாத்கிா், வாடி, சோலாபூா், குா்துவாடி, புணே, கல்யாண் ஆகிய நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும்.
மேலும், ஷொரணூா், மங்களூரு, ரத்னகிரி, ரோகா, பன்வேல் உள்ளிட்ட நிலையங்கள் தற்காலிக நிறுத்தங்களாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

