மனைவியைக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா், கொங்கு பிரதான சாலை டி.எம்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (41), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). வரதட்சிணைக் கேட்டு பிரியாவை ரமேஷ்குமாா் அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல கடந்த 2019 ஆகஸ்ட் 1-ஆம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ரமேஷ்குமாா் பிரியாவை கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.
இதையடுத்து, வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த திருப்பூா் வடக்கு போலீஸாா், ரமேஷ்குமாரைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்
