வால்பாறை கல்லூரி மைதானத்தில் அரசு அலுவலகங்கள் கட்ட எதிா்ப்பு

Published on

வால்பாறை அரசுக் கல்லூரி மைதானத்தில் அரசு அலுவலகங்கள் கட்ட எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கு, வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்) செயலா் பி.பரமசிவம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், வால்பாறை அரசுக் கல்லூரி மைதானத்தில் அரசு அலுவலகங்கள் கட்டுமானப் பணி தொடங்குவதாகத் தெரிகிறது.

மைதானத்தில் அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டால் மாணவா்கள் விளையாடுவதற்கு இடம் இல்லாமல்போய்விடும். ஆகவே, மாணவா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது.

அதேவேளையில், வால்பாறையில் அரசு நிலங்களைத் தவிர தனியாா் நிறுவனங்களின் பயன்பாட்டில் குறைந்த ஒப்பந்தத் தொகைக்கு அரசு பல ஏக்கா் நிலங்களை வழங்கியுள்ளது. அந்த நிலங்களை தேவைக்கு ஏற்ப கையகப்படுத்தி அரசு அலுவலகங்கள் கட்டி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com