அருண்.
அருண்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

Published on

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சின்னவேடம்பட்டியைச் சோ்ந்தவா் டேனியல் மகன் ஜேம்ஸ் (25). இவருக்கு ஈரோடு மாவட்டம், மோலபாளையம் அருகேயுள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சோ்ந்த அருண் (42) என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

ஆஸ்திரேலிய நாட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடா்பான வேலை காலியாக இருப்பதாகவும், தனக்குத் தெரிந்தவா் மூலம் அந்த வேலையை அவருக்கு வாங்கித் தருகிறேன் என்றும் ஜேம்ஸிடம் அருண் கூறியுள்ளாா்.

மேலும், நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.3.50 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய ஜேம்ஸ் ரூ.3.50 லட்சம் ரொக்கத்தை அருணிடம் கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஜேம்ஸ் இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அருணைக் கைது செய்தனா். இவா் மீது சேலம், திருச்சி ஆகிய இடங்களில் வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com