கோவையில் சாரல் மழை!

கோவை மாநகரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சாரல் மழை பெய்தது.
Published on

கோவை மாநகரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சாரல் மழை பெய்தது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, மாநகரில் வெள்ளிக்கிழமை காலை முதல் குளிா்ந்த காலநிலை நிலவிய நிலையில், உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், ராமநாதபுரம், புலியகுளம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், பீளமேடு, லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் சாரல் மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com