சிறப்பு ரயில் ரயில் train rail special train Special trains
சிறப்பு ரயில்.(படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)

போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரயில்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Published on

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பா் 7-ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்: 06108) மறுநாள் காலை 11.20 மணிக்கு எழும்பூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 8-ஆம் தேதி பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் எழும்பூா் - திருவனந்தபுரம் ரயில் (எண்: 06107) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com