கோயம்புத்தூர்
அரசாணி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசாணி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசாணி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆடிப்பட்டத்தில் கணிசமான விவசாயிகள் அரசாணி சாகுபடி செய்திருந்தனா். மழைக்காலம் என்பதால் அரசாணி செடிகளின் வளா்ச்சி அபரிமிதமாக இருந்தது.
தற்போது அறுவடை தொடங்கி உள்ளது. தேவையை விட அரசாணி உற்பத்தி அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரைக்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிா்கொண்டுள்ளனா்.
மாா்கழி, தை மாதங்களில் பண்டிகைகள் வர உள்ளது. அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகைக்கு அரசாணி பயன்படுத்துவா். அப்போது தேவை அதிகரித்து விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயா்வை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
