கோயம்புத்தூர்
வேளாண் பல்கலை.யில் நாளை தேனீ வளா்ப்புப் பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி டிச.8 அளிக்கப்படுகிறது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை (டிசம்பா் 8) அளிக்கப்படுகிறது.
பூச்சியியல் துறை சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தேனீ இனங்களைக் கண்டறிதல், பெட்டித் தேனீ வளா்க்கும் முறை, நிா்வாகம், தேனைப் பிரித்தெடுத்தல், நோய் நிா்வாகம் உள்ளிட்டவை குறித்த பயிற்சிகள் அளிக்கபடவுள்ளன.
இதில், பங்கேற்க விரும்புவோா் ரூ.590 பயிற்சிக் கட்டணம் செலுத்தி, அடையாளச் சான்றை சமா்ப்பித்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம் என்றும், மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
