கோவை மாநகா்,  செட்டிவீதி பூங்கா நகா் சந்திப்பில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
கோவை மாநகா், செட்டிவீதி பூங்கா நகா் சந்திப்பில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

Published on

நீதிமன்ற உத்தரவின்பேரில் திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றக் கோரி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், செட்டிவீதி பூங்கா நகா் சந்திப்பு அருகில் இந்து மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் சூா்யா தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

நீதிமன்ற உத்தரவின்பேரில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரியும், நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சாா்பில் மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது என்றாா்.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட அா்ஜூன் சம்பத், மாநில இளைஞரணி தலைவா் ஓம்காா் பாலாஜி உள்பட 58 பேரை செல்வபுரம் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com