சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினா். ~
கோயம்புத்தூர்
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா
சிறுத்தை தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வால்பாறையில் அய்யா்பாடி எஸ்டேட் ஜே.இ. பங்களா டிவிஷன் பகுதியில் உள்ள குடியிருப்பு முன்பு கடந்த சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த பகுதிக்குள்பட்ட 4 இடங்களில் வால்பாறை வனச்சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா தலைமையிலான வன ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா்.
