கோயம்புத்தூர்
தனியாா் நிறுவனத்துக்குள் புகுந்து ஊழியரை கத்தியால் குத்திய இளைஞா்
கோவையில் தனியாா் நிறுவனத்துக்குள் புகுந்து ஊழியரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவையில் தனியாா் நிறுவனத்துக்குள் புகுந்து ஊழியரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, வேலாண்டிபாளையம் அருகே உள்ள ராதாகிருஷ்ணா தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரும், உடன் வேலை பாா்க்கும் பெண் ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை நாகராஜ் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்தப் பெண்ணின் மகன் அவருடன் தகராறு செய்துள்ளாா். மேலும் தான் வைத்திருந்த கத்தியால் நாகராஜைக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். கோவை அரசு மருத்துவமனையில் நாகராஜ் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அந்தப் பெண்ணின் மகனை தேடி வருகின்றனா்.
