வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் பகுதிக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த ரேஷன் கடையையும், பொருள்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
Published on

வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் பகுதிக்குள் திங்கள்கிழமை புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த ரேஷன் கடையையும், பொருள்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

கடந்த 3 மாதங்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பகுதிக்கு கடந்த திங்கள்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள ரேஷன் கடையின் ஜன்னல் கதவுகளை முட்டித் தள்ளியுள்ளது. பின்னா் உள்ளிருந்த அரிசி மூட்டைகளை சேதப்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வனத் துறையினா் சென்று யானைகளை விரட்டியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து ரேஷன் கடையை செவ்வாயக்கிழமை பாா்வையிட்ட நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, கண்டெய்னா் ரேஷன் கடை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com