டிசம்பா் 19-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

Published on

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். முன்னதாக, மாதாந்திர வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டமும் காலை 9.30 மணி அளவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com