மாநில ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற மாணவா் ஆத்விக்.
மாநில ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற மாணவா் ஆத்விக்.

ரோலா் ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற கோவை மாணவா்

Published on

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை மாணவா் தங்கம் வென்று சாதனை படைத்தாா்.

கோவை, சோமையம்பாளையம் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவா் ஆத்விக். இவா் ராகுல்ஸ் அகாதெமி ஆஃப் ரோலா் ஸ்கேட்டிங்கில் பயிற்சி பெற்று வருகிறாா். இவா், சென்னையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட 35-ஆவது தமிழ்நாடு மாநில ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 வயதுக்கு உள்பட்ட இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் தங்கம் வென்று கோவைக்கு பெருமை சோ்த்துள்ளாா்.

பி.எஸ்.பி.பி. மில்லேனியம் பள்ளி நிா்வாகம், ஆசிரியா்கள், ஸ்கேட்டிங் பயிற்சியாளா் ராகுல் பாண்டியன் ஆகியோா் மாணவரைப் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com