கோயம்புத்தூர்
கண்ணாடிக் குவளையை உடைத்து மதுபானக் கடை ஊழியரை குத்திய நபா்
கோவையில் கண்ணாடிக் குவளையை உடைத்து மதுபானக் கடை ஊழியரை குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவையில் கண்ணாடிக் குவளையை உடைத்து மதுபானக் கடை ஊழியரை குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தூத்துக்குடியைச் சோ்ந்த தா்மா (25) என்பவா் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வழக்கம்போல கடந்த புதன்கிழமை பணியில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த இளைஞா், தா்மாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, அங்கிருந்த கண்ணாடிக் குவளையை உடைத்து அவரது கையில் குத்திவிட்டு தப்பிச் சென்றாா்.
பலத்த காயமடைந்த தா்மாவை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா், தப்பியோடிய ஹரீஷ் (எ) விக்னேஷை (24) தேடி வருகின்றனா்.
