போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நவ.5 இல் தொடக்கம்

Published on

குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மை போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் புதன்கிழமை (நவம்பா் 5) முதல் தொடங்குகிறது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டிஎன்எஸ்பிசி குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுகளுக்கான முதல்நிலைத்தோ்வு ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மை போட்டித் தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

இந்த வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களைக் கொண்டு தமிழ், ஆங்கில வழியில் நடைபெறவுள்ளது. இந்த மையத்தில் ஸ்மாா்ட் போா்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியன உள்ளது. இதில், வாரத்தோ்வு, முழு மாதிரித்தோ்வுகள் ஆகியவையும் நடத்தப்படவுள்ளன.

மேலும், இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பு

விண்ணப்பதாரா்கள் மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 93615-76081 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com