செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.

அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது: முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
Published on

கோவை: அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன், சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான் எம்.ஜி.ஆா். காலத்திலிருந்து அதிமுகவுக்காக கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருகிறேன். இந்த இயக்கம் வலுப்பெற வேண்டும் என்பதற்காகவும், தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும்தான் நாங்கள் இன்றைக்கு செயல்பட்டு வருகிறோம்.

திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் மகன், மைத்துனா், மாப்பிள்ளையின் தலையீடு கட்சியில் இருப்பது நாடறிந்த உண்மை.

தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவா்களையும் ஏமாற்றக்கூடாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com