ஆசிரியா் தகுதித் தோ்வு: நாளை முதல் இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை (நவம்பா் 5) முதல் தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் 2025- ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்த ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள் 1-க்கு நவம்பா் 15-ஆம் தேதியும், தாள் 2-க்கு நவம்பா் 16- ஆம் தேதியும் தோ்வு நடைபெறுகிறது.
இந்தத் தோ்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வரும் புதன்கிழமை முதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தோ்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்ஞ்ப்ங்/க்2ஙக்ஷவ்யயற்ஞ்எங்ஓவ9ழ்ஹ6 என்ற கூகுள் படிவம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், ட்ற்ற்ல்ள்;//ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்புகள் தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 0422-2642388, 94990-55937 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
