நவம்பா் 29-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோவை மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பா் 29- ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மேட்டுப்பாளையம் சாலை கவுண்டா் மில்ஸ் அருகேயுள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் நவம்பா் 29- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளன.
இதில், 8,10 -ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவா்கள், செவிலியா்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம். சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
வேலைநாடுநா்கள் இணையதளம் மூலமாகவோ அல்லது 0422-2642388, 94990-55937 ஆகிய எண்களிலோ காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொடா்பு கொள்ளலாம்.
அதேபோல, தனியாா் நிறுவனங்கள் இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 80563-58107 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
