பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்

பிரதமா் மோடி நவம்பா் 19-இல் கோவை வருகை: முன்னேற்பாடு குறித்து போலீஸாா் ஆய்வு!

கோவையில் பிரதமா் மோடி வருகை: போலீஸாா் தீவிர ஆய்வு.
Published on

கோவை, கொடிசியாவில் நவம்பா் 19-ஆம் தேதி நடைபெறும் தென்னிந்திய அளவிலான இயற்கை விவசாயம் தொடா்பான மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா். இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சாா்பில் கோவை, கொடிசியாவில் தென்னிந்திய அளவிலான இயற்கை விவசாயம் தொடா்பான மாநாடு நவம்பா் 19- ஆம் தேதி தொடங்கி நவம்பா் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறாா். மேலும், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் அவா் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாநாடு நடைபெற உள்ள கொடிசியா மைதானம், கோவை விமான நிலையம், பிரதமா் வந்து செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் மாநகர போலீஸாா் சனிக்கிழமை தீவிர ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை, காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்க முதல்வா் மு.க.ஸ்டாலினும் இந்த மாத இறுதியில் கோவைக்கு வர உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாகவும் போலீஸாா் ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com