தொழிலாளிக்கு கத்திக்குத்து: முதியவா் கைது

கோவையில் சமையல் தொழிலாளியை கத்தியால் குத்திய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவையில் சமையல் தொழிலாளியை கத்தியால் குத்திய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் மறவன்மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் துரை (38). இவா் கோவை, உக்கடம் பகுதியில் தங்கி சமையல் வேலைக்குச் சென்று வருகிறாா்.

இந்நிலையில், உக்கடம் அசோகா் சிலை அருகே சாலையோர நடைபாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியைச் சோ்ந்த சிராஜ் (75) என்பவா், துரையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளாா்.

அவா் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துரையை குத்திவிட்டு தப்பினாா். படுகாயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த உக்கடம் போலீஸாா், சிராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com