கொலை, கஞ்சா வழக்கில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் கொலை, கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

கோவையில் கொலை, கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோவை, நீலிக்கோணாம்பாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ.விக்னேஷ்(22). இவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். வடவள்ளியைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (25). கஞ்சா விற்பனை தொடா்பாக வடவள்ளி போலீஸாா் இவரைக் கைது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்துள்ளனா்.

இந்த இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் பரிந்துரை செய்திருந்தனா். இந்தப் பரிந்துரையின்பேரில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com