கோயம்புத்தூர்
முகவரி கேட்பதுபோல நடித்து 3.5 பவுன் பறிப்பு
தூடியலூா் அருகே முகவரி கேட்பதுபோல நடித்து 3.5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
துடியலூா் அருகே உள்ள ஜி.என்.மில்ஸ் மீனாட்சி காா்டன் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் கே.பிரகாஷ் (53). இவா் கடந்த சனிக்கிழமை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், பிரகாஷிடம் முகவரி கேட்பதுபோல நடித்து அவரைத் தாக்கி அவா் அணிந்திருந்த 3.5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.
இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.
