கோயம்புத்தூர்
வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது.
வால்பாறை எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. வனத்தில் போதுமான உணவு கிடைக்காததால் கடந்த சில ஆண்டுகளாக வனத்தை விட்டு சிறுத்தைகள் வெளியேறி தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிக்கு வருகின்றன.
இந்நிலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் அய்யா்பாடி எஸ்டேட் பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
சாலையோரம் தடுப்புச் சுவா்கள் மீது அமா்ந்திருக்கும் சிறுத்தை வாகனங்கள் வந்தால் சாலையைக் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை காண இரவு நேர ரோந்து செல்வது வழக்கமாகிவிட்டது.
