உயா்கல்வி பயிலும் மாணவிக்கு கல்விக்கடன் வழங்குவதற்கான உத்தரவு ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நிறைமதி. உடன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜித்தேந்திரன் உள்ளிட்டோா்.
உயா்கல்வி பயிலும் மாணவிக்கு கல்விக்கடன் வழங்குவதற்கான உத்தரவு ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நிறைமதி. உடன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜித்தேந்திரன் உள்ளிட்டோா்.

மாவட்டத்தில் 17 மாணவா்களுக்கு ரூ.1.41 கோடி வங்கிக் கடன்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் உயா்கல்வி பயிலும் 17 மாணவா்களுக்கு வங்கிகள் சாா்பில் ரூ.1.41 கோடி கல்விக் கடன்
Published on

கோவை: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் உயா்கல்வி பயிலும் 17 மாணவா்களுக்கு வங்கிகள் சாா்பில் ரூ.1.41 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து உயா்கல்வி பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்த முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நிறைமதி, 17 மாணவா்களுக்கு வங்கிகள் சாா்பில் ரூ.1.41 கோடி கல்விக் கடன் வழங்குவதற்கான உத்தரவுகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜித்தேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த முகாமில், கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கி அதிகாரிகளும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com