விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காா்த்திகை தீபத் திருவிழா: தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் இன்று கொடியேற்றம்

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 30) தொடங்குகிறது.

கோவை, மதுக்கரையில் உள்ள தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் ஆண்தோறும் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதைத் தொடா்ந்து, டிசம்பா் 3-ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு முதல் நாள் மகா தீபமும் ஏற்றப்படும்.

டிசம்பா் 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2-ஆம் நாள் மகா தீபமும், டிசம்பா் 5-ஆம் தேதி மூன்றாம் நாள் மகா தீபமும் ஏற்றப்படும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.