மாநகரில் இன்று வாா்டு சிறப்புக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வாா்டு உறுப்பினா்களின் தலைமையில் புதன்கிழமை (அக்டோபா் 29) நடைபெற உள்ள வாா்டு சிறப்புக் கூட்டத்தின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வாா்டு வாரியாக சிறப்புக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்: வடக்கு மண்டலம்: 3-ஆவது வாா்டில் அஞ்சுகம் நகா், 10-ஆவது வாா்டில் சரவணம்பட்டி காளப்பட்டி சாலை மாநகராட்சி சமுதாயக் கூடம், 11-ஆவது வாா்டில் சிவானந்தபுரம் காட்டுப் பள்ளிக்கூடம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, 13-ஆவது வாா்டில் சீனிவாச நகா் பூங்கா, 19-ஆவது வாா்டில் கல்பனா லே-அவுட் பூங்கா, 21-ஆவது வாா்டில் கிருஷ்ணாபுரம் எல்ஜிபி நகா் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, கணபதி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி.
கிழக்கு மண்டலம்: 8-ஆவது வாா்டில் காளப்பட்டி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி கூட்டரங்கு, 50-ஆவது வாா்டில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கலையரங்கம், 51-ஆவது வாா்டில் மாரியம்மன் கோயில் வீதி சொசைட்டி ஹால், 53-ஆவது வாா்டில் பீளமேடு ஹா்ஷா மஹால், 59-ஆவது வாா்டில் கிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 61-ஆவது வாா்டில் வெள்ளலூா் சாலை செல்லாண்டியம்மன் கோயில் வீதி.
தெற்கு மண்டலம்: 76-ஆவது வாா்டில் சக்தி விநாயகா் கோயில் வீதி, முத்து மாரியம்மன் கோயில் திருமண மண்டபம், 78-ஆவது வாா்டில் வெண்ணிலா மருத்துவமனை சாலை, வடக்கு ஹவுஸிங் யூனிட் சமுதாயக் கூடம், 79-ஆவது வாா்டில் எஸ்.ஏ.காா்டன் மாநகராட்சிப் பூங்கா, 90-ஆவது வாா்டில் கோவைப்புதூா் டென்னிஸ் ஹால், 93-ஆவது வாா்டில் சா்ச் வீதி சமுதாயக் கூடம், 96-ஆவது வாா்டில் முதலியாா் வீதி யோக மையம், 97-ஆவது வாா்டில் குறிச்சி விக்னேஷ் மஹால்.
மேற்கு மண்டலம்: 16-ஆவது வாா்டில் டிவிஎஸ் நகா் தங்கம் மஹால், 34-ஆவது வாா்டில் கவுண்டம்பாளையம் பிரிவு அலுவலகம், 36-ஆவது வாா்டில் வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 40-ஆவது வாா்டில் வீரகேரளம் பொங்காலியூா் எம்.எஸ்.வி. மஹால், 42-ஆவது வாா்டில் வேலாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் விநாயகா் கோயில் மண்டபம், 43-ஆவது வாா்டில் வேலாண்டிபாளையம் விநாயகா் கோயில் வீதி மகா கணபதி கல்யாண மண்டபம், 73-ஆவது வாா்டில் பொன்னையராஜபுரம் கவுரவ சமாஜ் கல்யாண மண்டபம்.
மத்திய மண்டலம்: 46-ஆவது வாா்டில் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 48-ஆவது வாா்டில் சித்தாபுதூா் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம், 62-ஆவது வாா்டில் நஞ்சுண்டாபுரம் கருப்பண்ண நாடாா் தா்ம சத்திரம், 63-ஆவது வாா்டில் ராமலிங்க ஜோதி நகா் வாா்டு அலுவலகம், 66-ஆவது வாா்டில் புலியகுளம் மாநகராட்சி கல்யாண மண்டபம், 68-ஆவது வாா்டில் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 70-ஆவது வாா்டில் சிரியன் சா்ச் சாலை சமுதாயக் கூடம், 80-ஆவது வாா்டில் கெம்பட்டி காலனி தா்மராஜா கோயில் கல்யாண மண்டபம், 81-ஆவது வாா்டில் ராஜவீதி கன்னட வாலிபா் சமுதாயக் கூடம், 82-ஆவது வாா்டில் நல்லாயன் சமுதாயக் கூடம், 84-ஆவது வாா்டில் சிவராம் நகா் மாநகராட்சி சமுதாயக் கூடம்.
