கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

Published on

கோவையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற்.

கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி (57). இவா் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

இவா்கள் இருகூா் சாலையில் சுங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞா்கள் ரங்கசாமி மனைவி அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.

இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com