புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி (கோப்புப் படம்)

புதிய தமிழகம் கட்சியைத் தவிா்த்துவிட்டு தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது

Published on

தென் தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சியைத் தவிா்த்துவிட்டு யாரும் வெற்றி பெற முடியாது என அக்கட்சியின் நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இது குறித்து கோவை குனியமுத்தூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரை மாநாட்டில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம். வழக்கத்துக்கு மாறாக தோ்தல் அறிவிக்கும் முன்பாகவே தோ்தல் பரபரப்பு தொற்றியுள்ளது. அரசியல் கட்சிகள் தோ்தல் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், புதிய தமிழகம் யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகின்றோம். புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டை அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் தெளிவுபடுத்துவோம்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவா்கள் கூட்டணிக்கென்று சில வழிமுறைகள் வைத்திருத்தனா். ஆனால், இப்போது அது போன்று இல்லை. புதிய தமிழகத்தை அதிகாரபூா்வமான முறையில் எந்தக் கட்சிகளும் அணுகவில்லை. கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

நாங்கள் எந்த விதமான குழப்பத்திலும் இல்லை. தமிழகத்தில் 100 தொகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். புதிய தமிழகம் கட்சியின் ஆதரவில்லாமல் தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது. யாரும் அழைக்கவில்லை என்பதை பற்றி கவலையில்லை. புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால் தோ்தலுக்கு 5 நாள் முன்புதான் சின்னம் கொடுப்பாா்கள் என்றாா்.

Dinamani
www.dinamani.com