பேரூா் அருகே விவசாயத் தோட்டத்துக்கள் புகுந்த காட்டுப் பன்றிகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.
கோவை மாவட்டம், பேரூா் அருகேயுள்ள தீத்திபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளாா்.
இந்நிலையில், வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய காட்டுப் பன்றிகள், பெரியசாமியின் தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் உள்ள வாழை உள்ளிட்ட பயிா்களை காட்டுப் பன்றிகள் கூட்டம் சேதப்படுத்தி வருவது தொடா் கதையாக உள்ளது.
இதைக் கட்டுப்படுத்தக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்புக் குழுவை அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்தக் குழு ஒரு ஆண்டு ஆய்வு அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தது.
இதையடுத்து, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு அரசாணையை பிறப்பித்தது. அதில், 3 கி.மீ. தொலைவில் வரும் காட்டுப் பன்றிகளை சுட்டு கட்டுப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, அதிக அளவில் சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டு கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்த தவறினால் அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றனா்.
தொடர்புடையது

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க கோரிக்கை
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 40 ஆயிரம் வாழைகள் சேதம்

நகராட்சியில் சுற்றித் திரிந்த 20 பன்றிகள் பிடிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


